ஆசை காதலனை அறிமுகப்படுத்திய சர்வைவர் பிரபலம் – வாழ்த்துக்களை பொழிந்து வரும் ரசிகர்கள்!!

0
ஆசை காதலனை அறிமுகப்படுத்திய சர்வைவர் பிரபலம் - வாழ்த்துக்களை பொழிந்து வரும் ரசிகர்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பிரபலமான ஐஸ்வர்யா முதல் முறையாக தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் .

ஐஸ்வர்யா:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மலை மற்றும் காட்டு பகுதிகளில் போராடும் விதமாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த ஷோவை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து பிரபலங்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி கடைசி வரை போராடி வந்த நிலையில், நடிகை விஜயலக்ஷ்மி வின்னர் டைட்டிலை அடித்து சென்றார். அந்த போட்டியில் கடைசி வரை போராடி தோல்வி அடைந்தவர் தான் ஐஸ்வர்யா.இவர் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் இவர் பிட்னஸ் பயிற்சியாளராக பணியாற்றி வருவது மட்டுமின்றி தற்போது மாடலிங் துறையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா. குறிப்பாக சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது ஆசை காதலுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here