காதலர் தின கொண்டாட்டம்.., கிடுகிடுவென உயர்ந்த ரோஜா பூக்கள் விலை.., ஒரு கட்டு எவ்வளவு தெரியுமா??

0
காதலர் தின கொண்டாட்டம்.., கிடுகிடுவென உயர்ந்த ரோஜா பூக்கள் விலை.., ஒரு கட்டு எவ்வளவு தெரியுமா??
காதலர் தின கொண்டாட்டம்.., கிடுகிடுவென உயர்ந்த ரோஜா பூக்கள் விலை.., ஒரு கட்டு எவ்வளவு தெரியுமா??

ஜாதி, மதம், மொழிகள் போன்ற பலவற்றையும் கடந்து காதல் இன்று வரை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நாளை உலக காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த காதலர் தினத்திற்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி 14-நாளில் உலக காதலர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மேலும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு சாக்லேட், பூங்கொத்து போன்றவற்றை வழங்குவார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் காதலர் தினம் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது ரோஜா பூங்கொத்து தான். இந்த காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இத்தனை நாள் மலிவு விலையில் விற்கப்பட்டு வந்த ரோஜா பூ கட்டு இன்று ரூபாய் 300 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு ரோஜா பூ 3ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று 50 முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. என்னதான் விலை அதிகரித்தாலும் தம் மனதுக்கு பிடித்தவர்களுக்கு வாங்கி கொடுப்பதில் எல்லோருக்கும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.

அடேங்கப்பா.. நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here