மீண்டும் எக்குத்தப்பாக எகிறிய சிலிண்டர் விலை.., அதிர்ச்சி அடைந்த நுகர்வோர்கள்!!!

0
மீண்டும் எக்குத்தப்பாக எகிறிய சிலிண்டர் விலை.., அதிர்ச்சி அடைந்த நுகர்வோர்கள்!!!
மீண்டும் எக்குத்தப்பாக எகிறிய சிலிண்டர் விலை.., அதிர்ச்சி அடைந்த நுகர்வோர்கள்!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் இந்த பட்ஜெட் தாக்கலில் மக்களுக்கு பயனுள்ள பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிலிண்டர் விலை குறைக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறாக இம்மாதம் சிலிண்டரின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை பொருத்தே சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இம்மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை எக்குத்தப்பாக அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று வரை 1924 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் விலை இன்று முதல் 1937 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவித்துள்ளனர். சிலிண்டரின் இந்த விலை ஏற்றத்தால் ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here