நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா… அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!  

0
நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!  

திருமண நிகழ்வின் போது வழங்கப்படும் பரிசுப் பொருட்களுக்கும், பணத்திற்கும் வருமான வரி உள்ளதா, இல்லையா என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.

பரிசுப் பொருட்களுக்கு வரி:

தமிழகத்தை பொறுத்தவரை திருமணம், காதுகுத்து, கிடாவெட்டு போன்ற விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த விழாக்களின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து அன்பின் வெளிப்பாடாக பரிசுகள் பெறுவது வழக்கமான ஒன்றாகும். இப்பரிசானது நகைகளாகவோ, பொருட்களாகவோ, சொத்துகளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் பரிசுகளுக்கு வருமான வரி துறையானது வரி வசூலித்து வருகிறது.

இனி ஒரே நிறம் தான்.. பணிந்த Zomato நிறுவனம்.. முழு விவரம் உள்ளே!!

எந்தெந்த பொருட்களுக்கு வரி:

  • அதாவது திருமண விழாவின் போது பெறப்படும் மொய் பணம் மற்றும் உயிலின் மூலம் பெறப்பட்ட பரிசுகள் அல்லது சொத்துக்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
  • வருமான வரிச் சட்டம் 1961 ன் கீழ், ஒரு நிதியாண்டில் 50,000 ரூபாய் வரை பெறப்படும் பரிசுகளுக்கு வரி கிடையாது.
  • மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் பெறப்படும் பரிசுப் பொருட்களுக்கு வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.
  • உறவினர்கள் மூலம் பரிசாக பெறப்படும் சொத்துக்கள் அல்லது பணத்தின் மூலம் வருமானம் பெற்றால் அதற்கு வரி வசூலிக்கப்படும்.
  • FD போன்ற சேமிப்பு திட்டங்களை பரிசாகப் பெறப்பட்டால் அதற்கு வழங்கப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
  • இவை தவிர பரிசாக பெறப்பட்ட பணத்தை முதலீடாக கொண்டு தொழில் துவங்கி நஷ்டம் ஏற்பட்டால் அந்த தொகைக்கு வரி விலக்கு வழங்கப்படும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here