Friday, April 26, 2024

சீனாவின் உதவியுடன் PoK-ல் அணைக் கட்டுமானம் தொடக்கம் – பாகிஸ்தான் அராஜகம்..!!

Must Read

சீனா-பாகிஸ்தானின் அணைக் கட்டுமான திட்டத்திற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்த போதிலும், பாகிஸ்தானின் பிரதம மந்திரியான இம்ரான் கான் டியமர்-பாஷா அணையின் கட்டுமான பணியைத் தொடங்கினார்.

பிரதம மந்திரி இம்ரான் கானின் உரை:

டியமர்-பாஷா அணையானது, டர்பேளா மற்றும் மங்களாவிற்கு அடுத்து பாகிஸ்தானின் மூன்றாவது மிகப்பெரிய அணையாக இருக்கும் எனவும், இத்திட்டம் 4,500MW மின்சாரத்தை தயாரிப்பதுடன், 16,000 வேலைகளைக் கொடுக்கும் எனவும், இது 2028-ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ImranKhan
ImranKhan

மேலும், நீர்சக்தி திட்டங்கள் உலக வெப்பமயமாதலை தடுக்கும் எனவும், இந்த அணை கட்டும் திட்டம் 50 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது எனவும், நிறைய அணைகள் ஆறுகளின் மீது மலிவான ஆற்றலை பெற மற்றும் வெளிநாட்டு எரிபொருள் வாங்க அந்நிய செலவாணியின் அழுத்தத்தை குறைக்க கட்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

அணை கட்டுமான ஒப்பந்தம் மற்றும் எதிர்ப்பு:

மே மாதத்தில் பாகிஸ்தான் அரசானது சீனா நடத்தும் நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் இராணுவ வணிகத்தின் கூட்டு முயற்சியுடன் 442 பில்லியன் ஒப்பந்தம், டியமர்-பாஷா அணையின் கட்டுமானத்திற்கு இடப்பட்டது.

Pakistan Will Complete the dam project - Imrtan khan
Pakistan Will Complete the dam project – Imrtan khan

பாகிஸ்தான் அணை கட்டுவதற்காக ஒப்பந்தம் இட்டுள்ளப் பகுதி பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்புப் பகுதி என்றும், அவ்வொப்பந்தம் முறையானது அல்ல என்றும் இந்தியா தெரிவித்தது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் போன்றவற்றின் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற இயலாத பகுதி எனவும்,

China Pakistan
China Pakistan

அவற்றிற்கு தங்களது அக்கறை மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து விட்டதாகவும் MEA பேச்சாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். பாகிஸ்தானின் பொது நலனுக்கான சபை 2010-ல் கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த போதிலும், இத்திட்டம் இந்தியாவின் எதிர்ப்பினால் தாமதம் ஆனது என இம்ரான் கூறியுள்ளார்.

Dawn நாளிதழின் அறிக்கை:

இத்திட்டம் நிறைவேறினால் பாகிஸ்தானின் சேமிப்பு திறன் 30 முதல் 48 நாட்களாக அதிகாரிக்கும் மற்றும் மின்சார தயாரிப்பு வசதியானது தனியார் நிறுவனங்களுக்கு சிறந்த முதலீடாக மாறி, தேசிய கட்டத்திற்கு 4,500MW கூடுதல் மின்சாரத்தை தயாரிக்க இயலும் என Dawn நாளிதழின் மே மாத அறிக்கைத் தெரிவிக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஷால் நடித்த “ரத்னம்” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம். முதல் ஷோ பார்த்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -