IPL வரலாற்றில் இன்று மறக்க முடியாத முக்கிய நாள்.., என்னனு தெரிஞ்சுக்கணுமா?? முழு விவரம் இதோ!!!

0

IPL 2023 தொடருக்கான இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான CSK அணி கடைசி தருணத்தில் வெற்றி பெற்று 5 வது முறையாக கோப்பையை சொந்தமாக்கிக் கொண்டனர். இதனால் அந்த அணிக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க IPL என்று சொன்னாலே இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.

அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான IPL வரலாற்றில் இந்நாளில் அரங்கேறிய முக்கிய நிகழ்வு ஒன்றை பார்க்கலாம். அதாவது இதே நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 வது முறையாக IPL பட்டத்தை தட்டி சென்றது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு கோப்பையை முதன் முறையாக வென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்த அணிக்கு இதே நாளில் தான் மீண்டும் அதே சந்தோஷத்தை உணர்ந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை நினைவு கூறும் விதமாக இந்த அணி ரசிகர்கள் இதே நாளில் 2014 ஆம் ஆண்டு ருசித்த வெற்றி தருணத்தை தற்போது கொல்கத்தா ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆப் கூட செல்லாமல் IPL தொடரை விட்டு வெளியேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here