அரசு ஊழியர்களே.., அகவிலைப்படியை தொடர்ந்து இந்த சலுகையும் இருக்கு.., வெளியான அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களே.., அகவிலைப்படியை தொடர்ந்து இந்த சலுகையும் இருக்கு.., வெளியான அறிவிப்பு!!
அரசு ஊழியர்களே.., அகவிலைப்படியை தொடர்ந்து இந்த சலுகையும் இருக்கு.., வெளியான அறிவிப்பு!!

தமிழக அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் தான் ஆண்டுக்கு இரு முறை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை அரசு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் அறிவித்து வருகிறது.

கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த ஜனவரி மாதம் வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு கடந்த மே மாத தொடக்கத்தில் தான் அறிவித்தது. அதாவது, அகவிலைப்படி உயர்வை 4% அதிகரித்து 38%-லிருந்து 42% -ஆக அரசு உயர்த்தியது. இந்த உயர்வால், ஆண்டுக்கு 2,366.82 கோடி கூடுதல் செலவானாலும், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் தொடர்ச்சியாக தற்போது, போக்குவரத்து கழகம் தொடர்பாக சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்குவது குறித்து அறிவித்துள்ளார். அதாவது, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை மற்றும் விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட 1582.44 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பலன்களை, கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2022 ஆம் ஆண்டு வரை, ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என 8,361 நபர்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here