விளம்பரம் பார்த்தால் பணம்., மோசடி செய்த நிறுவனத்திற்கு பொதுமக்கள்  ஆதரவு., உறுதி வாக்குமூலத்தால் பரபரப்பு!!  

0
இன்றைய நவீன சமுதாயத்தில் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இணைய சேவையின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. மேலும் மொபைல் போன்களின் வழியாக பல மோசடிகள் நடந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில் ஆன்லைனில் விளம்பரங்கள் பார்ப்பதன்‌ மூலம் பணம் சம்பாதிக்கலாம் என சில வெப்சைட்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றது. அந்த வகையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என பொது மக்களுக்கு ( My V3 Ads) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து இந்நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் கோவைக்கு திரண்டு வந்துள்ளனர். மேலும் தங்களுக்கு வருமானம் கிடைக்கச் செய்யும் ஆன்லைன் நிறுவனத்திற்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். மேலும் இந்த நிறுவனத்திற்கு எங்களது முழு ஆதரவையும் கொடுக்குறோம் என மக்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here