“தல தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் CSK-க்காக விளையாடுவர்”…, தீபக் சாஹர் ஓபன் டாக்!!

0

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், தற்போதிருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல, ஐபிஎல் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதற்கு CSK அணியின் நட்சத்திர வீரரான தீபக் சாஹர் உறுதியான பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “தோனி தற்போது நன்றாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் 2 அல்லது 3 சீசன்களாவது CSK அணிக்காக விளையாட வேண்டும். அவரை நான் எனது மூத்த சகோதரராகவே பார்க்கிறேன். அதன் அடிப்படையிலேயே அவர் என்னிடம் வேடிக்கையான தருணங்களை உருவாக்குகிறார். மேலும், அவர் தான் எனக்கு PUBG விளையாடுவதைக் கற்றுக் கொடுத்தார்” என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

விளம்பரம் பார்த்தால் பணம்., மோசடி செய்த நிறுவனத்திற்கு பொதுமக்கள்  ஆதரவு., உறுதி வாக்குமூலத்தால் பரபரப்பு!!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here