உங்க EPFO வின் UAN நம்பரை மறந்துடீங்களா?? இதை மட்டும் செய்தால் போதும்., மீண்டும் உங்க நம்பர் கிடைத்துவிடும்!!! 

0
உங்க EPFO வின் UAN நம்பரை மறந்துடீங்களா?? இதை மட்டும் செய்தால் போதும்., மீண்டும் உங்க நம்பர் கிடைத்துவிடும்!!! 

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை வருங்கால  வைப்பு   நிதி ( EPFO )என்ற  பெயரில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தின் மூலம் பணியாளர்களின்  பொருளாதாரத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. அதன்படி வருங்கால வைப்பு நிதி கணக்கை ஆக்டிவ் செய்ய UAN வழங்கப்படும். மேலும் 12 இலக்கை கொண்ட யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை சில  நேரங்களில் பணியாளர்கள் மறந்துவிடுவார்கள்.

அப்படி  நீங்களும்  உங்கள் UAN நபரை மறந்து விட்டால் கீழே கூறப்பட்டுள்ள இந்த முறையை பாலோவ் செய்து யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை மீட்டெடுத்துக் கொள்ளவும்.

  • முதலில் https://www.epfindia.gov.in/site என்ற EPFO வெப்சைட்டை ஓபன் செய்துகொள்ளவும்.
  • பின்னர் அதில் சர்வீசஸ் என்ற பிரிவின் கீழ் “For Employees” என்ற ஆப்ஷனில் உள்ள  “Member UAN/Online Service (OCS/OTCP)” என்பதை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் தெரியும்  “Know your UAN” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். மேலும் அதில் EPFO கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும். பின் அந்த நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பரை ஆக்டிவ் செய்யவும்.
  • பின்னர் அதில்  உங்களது பெயர், பிறந்த தேதி, மெம்பர் ID, ஆதார் அல்லது PAN நம்பரை என்டர் செய்யவும். அதன் பிறகு “Show My UAN” என்பதை கிளிக்  செய்தால் உங்களது EPFO கணக்கிற்கான UAN நபர் அதில் திரையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here