ஐசிசியின் மூன்று வடிவிலும் சாதிக்க துடிக்கும் இந்திய அணி…, அதற்கு ஆஸ்திரேலியா வழிவிடும்மா??

0
ஐசிசியின் மூன்று வடிவிலும் சாதிக்க துடிக்கும் இந்திய அணி..., அதற்கு ஆஸ்திரேலியா வழிவிடும்மா??
ஐசிசியின் மூன்று வடிவிலும் சாதிக்க துடிக்கும் இந்திய அணி..., அதற்கு ஆஸ்திரேலியா வழிவிடும்மா??

ஐசிசியின் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியானது, டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் நம்பர் 1 இடத்தையும், ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்தையும் பிடித்து தனித்துவமான சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், ஒருநாள் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கு இந்திய அணி சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் 115 புள்ளிகளை தான் பெற்றுள்ளன. இருப்பினும் பாகிஸ்தான் அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று (செப்டம்பர் 22) மோத உள்ள ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றால், நம்பர் 1. இடத்தை எளிதில் இந்திய அணி அடையலாம். மேலும், மூன்று வடிவிலும் நம்பர் 1. இடத்தை பிடித்துள்ள அணி என்ற மாபெரும் சாதனையையும் இந்திய அணி படைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IND vs AUS: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியில்…, பிளேயிங் லெவனில் இவங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here