சர்வதேச டெஸ்ட் நம்பர் 1. பவுலரான பும்ரா…, ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி அபாரம்!! 

0

ஐசிசியானது மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் முழுவதும் டெஸ்ட் போட்டியே அதிக அளவில் நடைபெற்றதால், அதன் தரவரிசையிலேயே அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, டெஸ்டின் பேட்டிங்கான தரவரிசையில் இரட்டை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 இடங்கள் முன்னேறி 29 வது இடத்தை பிடித்துள்ளார். இதில், விராட் கோலி 7 வது இடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி பும்ரா முதலிடத்தை எட்டியுள்ளார். இவரை தொடர்ந்து, அஸ்வின் 3 வது இடத்திலும், ஜடேஜா 8 வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் 2 இடங்களிலும், அக்சர் படேல் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

விஜயின் GOAT படத்தின் ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here