விஜயின் GOAT படத்தின் ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
விஜயின் GOAT படத்தின் ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

தமிழ் திரை உலகில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் 50% சதவீதம் நிறைவடைந்த நிலையில், விஜய்யின் பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகின. இந்நிலையில் விஜய் நடிக்கும் GOAT படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது GOAT திரைப்படம் வருகிற அக்டோபர் 29ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று (பிப்.7) பேச்சுவார்த்தை., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here