ஐசிசி அறிவித்த முக்கிய அப்டேட்…, மீண்டும் தலைவராக கிரெக் பார்க்லே தேர்வா??

0
ஐசிசி அறிவித்த முக்கிய அப்டேட்..., மீண்டும் தலைவராக கிரெக் பார்க்லே தேர்வா??
ஐசிசி அறிவித்த முக்கிய அப்டேட்..., மீண்டும் தலைவராக கிரெக் பார்க்லே தேர்வா??

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கிரெக் பார்க்லேயின் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைவரை ஐசிசி அறிவித்துள்ளனர்..

ஐசிசி தலைவர்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் கிரெக் பார்க்லேயின் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 11 மற்றும் 13 தேதிக்குள் புது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், ஐசிசியானது கிரெக் பார்க்லேயே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் தலைவராக பொறுப்பு வகிப்பார் என அறிவித்துள்ளனர். இந்த பதவிக்காலம் ஆனது, நவம்பர் 2024 வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய கிரெக் பார்க்லே, மீண்டும் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுத்த சக இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தோனியின் சாதனையை நிகழ்த்த போவது யார்?? சவால் விடும் முன்னாள் வீரர்!!

இதனை தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிரிக்கெட் தொடர்களில் பெற்ற வெற்றிகரமான வளர்ச்சியை எதிர்காலத்திலும் செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இவர், 2015 ஆம் ஆண்டு நடைபெற பெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இயக்குநராகவும் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here