இறால் எடுத்தா “இப்படி வடை” செஞ்சு பாருங்க.,, டேஸ்ட் அள்ளும்!! செய்முறை இதோ!!

0
இறால் எடுத்தா
இறால் எடுத்தா "இப்படி வடை" செஞ்சு பாருங்க.,, டேஸ்ட் அள்ளும்!! செய்முறை இதோ!!

அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறாலை விதவிதமாக சமைச்சு சாப்பிடலாம். இறாலில் அதிக அளவு புரதம், வைட்டமின் அடங்கியுள்ளது. அதனால் டயட் மெயின்டன் பண்ணுபவர்கள் இறால் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் “இறால் வடை” செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • இறால் -1 பவுல்
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 1/2 கப்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 3
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு – 5 பல்
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:

முதலில் இறாலை உரித்துக் விட்டு உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் வெந்த இறாலை ஆறவைத்து நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இதையடுத்து துருவிய தேங்காய், பூண்டு, இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து மசாலாவாக வைத்து கொள்ள வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள இறாலை, இடித்து வைத்துள்ள மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கடலை மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசைய வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது அடுப்பில் ஒரு வாணலியில், கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள வடை மாவை சிறு வடைகளாக இலையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காரசாரமான “இறால் வடை” ரெடி. இதை குடும்பத்துக்கு பரிமாறினால் உங்களை பாராட்டி தள்ளிருவாங்க, அந்த அளவுக்கு டேஸ்ட் சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here