அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருது…, இந்த மூவரில் யாருக்கு??

0
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருது..., இந்த மூவரில் யாருக்கு??
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருது..., இந்த மூவரில் யாருக்கு??

அக்டோபர் மாதம் சிறந்து விளங்கும் வீரருக்கு ஐசிசி விருது வழங்குவதில், இந்தியாவின் விராட் கோஹ்லியின் பெயர் பரிந்துரையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்யும். தற்போது, டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் அரையிறுதியை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோஹ்லி 220 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர், கடந்த மாதத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 82, 62 மற்றும் 12 ரன்கள் என மொத்தமாக 156 ரன்கள் அடித்துள்ளார். மேலும், இம்மாத தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 49 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 205 ரன்களுடன் 150.73 என மிக சிறந்த சராசரியை வைத்துள்ளார். இதன் மூலம், ஐசிசி வழங்கும் சிறந்த மாதத்திற்கான விருதை பெறுவதற்கான பரிந்துரையில் விராட் கோஹ்லி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அரையிறுதிக்கு முன்னேறிய கிரீஸ் வீராங்கனை.., இறுதி போட்டியில் எதிர்கொள்ளப் போவது யாரை தெரியுமா??

இவரை போல, தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும் ஐசிசியின் பரிந்துரையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், டேவிட் மில்லர் கடந்த மாதத்தில் மட்டும் 4 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 303 ரன்களை குவித்துள்ளார். சிக்கந்தர் ராசா ஆல்ரௌண்டராக கடந்த மாதத்தில் சிறந்து விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த மூவரில் யாருக்கு ஐசிசி விருது வழங்கும் என பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here