அபராதம் கட்டலைனா வண்டி பறிமுதல்.., மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

0
அபராதம் கட்டலைனா.., வண்டி பறிமுதல்.., மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
அபராதம் கட்டலைனா.., வண்டி பறிமுதல்.., மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் அபராத தொகையை செலுத்தாததால் போக்குவரத்து போலீசார் தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து உள்ளனர்.

புதிய நடவடிக்கை:

தமிழகத்தில் ஏற்படும் அதிகமான வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக, சென்னையில் புதிய போக்குவரத்து விதி அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த விதியின் படி, குடிபோதையில் ஒருவர் வண்டியை ஒட்டி வந்தால், அவரின் பின்னால் அமர்ந்து பயணம் மேற்கொள்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதன் படி, குடிபோதையில் வண்டி ஓட்டி வருபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இருப்பினும் சில வாகன ஓட்டிகள் அந்த அபராத தொகையை காட்டாமல் வண்டியை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவற்றை தடுக்கும் விதமாக போக்குவரத்து போலீசார் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது அபராத தொகையை செலுத்துமாறு கோர்ட் மூலம் வாரண்ட் பெற்று குற்ற செயலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அனுப்புகின்றனர்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் – 6 லட்சம் பேர் திடீர் வெளியேற்றம்! கல்வித்துறையின் பகீர் அறிக்கை!!

மேலும் இந்த வாரண்ட் அனுப்பப்பட்டு 14 நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர்கள் செலுத்தவில்லை என்றால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதங்களில் குடிபோதையில் வண்டி ஓட்டி, போலீசிடம் சிக்கிய 50 வாகன ஓட்டிகளின் கார்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here