அரையிறுதிக்கு முன்னேறிய கிரீஸ் வீராங்கனை.., இறுதி போட்டியில் எதிர்கொள்ளப் போவது யாரை தெரியுமா??

0
அரையிறுதிக்கு முன்னேறிய கிரீஸ் வீராங்கனை.., இறுதி போட்டியில் எதிர்கொள்ளப் போவது யாரை தெரியுமா??

டெக்சஸில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

டென்னிஸ்

டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் பெண்களுக்கான டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பெலாரஸின் அரினா சபலெங்காவை எதிர்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனையை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மரியா சக்காரி WTA பெண்களுக்கான தரவரிசை பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டு 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் வெற்றி பெற்றார்.

செஸ் நியூஸ் அப்டேட்.., 16 வயதில் சாதனை படைத்த சென்னை வீரர்.., NO.1 வீரரை வீழ்த்தி அசத்தல்!!

இதையடுத்து இறுதி போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை எதிர்கொள்ள உள்ளார். இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் பெண்களுக்கான WTA தரவரிசை பட்டியலில் முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here