ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து முன்னிலை…, யார் யார் எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து முன்னிலை..., யார் யார் எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!
ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து முன்னிலை..., யார் யார் எந்த இடம்?? முழு விவரம் உள்ளே!!

ஐசிசியானது, சர்வதேச அளவில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறந்து வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து சர்வதேச அணிகளும், டெஸ்ட் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால், இதற்கான தரவரிசை பட்டியலில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், குறிப்பாக, பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பலர் தரவரிசையில் முன்னேறி உள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 10 இடங்கள் முன்னேறி ஸ்ரேயாஸ் ஐயர் 16 வது இடத்தையும் அஸ்வின் 3 இடம் முன்னேறி 84 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் 6வது மற்றும் 9வது இடத்தை தக்க வைத்துள்ளனர். ஆனால், விராட் கோலி 2 இடம் பின்தங்கி 14 வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்…, சாதனை பட்டியலில் இணைந்து அபாரம்!!

டெஸ்டில் பவுலர்களுக்கான தரவரிசையில், பும்ரா, அஸ்வின் 4, 5 இடங்களும், கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய, உமேஷ் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 33 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில், ஜடேஜா மற்றும் அஸ்வின் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும், விராட் கோலி (13), கே எல் ராகுல் (19), ரோஹித் சர்மா (21) இடங்களில் உள்ளனர். ஒருநாள் தரவரிசையில், 3 இடங்கள் முன்னேறிய விராட் கோலி 8 வது இடத்தையும், ரோஹித் சர்மா 9 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here