PF பணத்தை வீட்டில் இருந்து எடுப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

0
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் நலன் கருதி அந்தந்த நிறுவனம் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்களின் PF கணக்கில் வரவு வைத்து வருகிறது. ஆனால் இந்த பணத்தை ஊழியர்கள் எடுப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவசர காலத்தில் வீட்டில் இருந்தபடியே சுலபமாக எப்படி எடுப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
  • முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in என்ற முகவரிக்கு சென்று “Online Advance Claim” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்களுடைய PF நம்பர் (UAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு “Online Services” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் PF அட்வான்ஸ் தொகையை எடுப்பதற்கான படிவத்தைத் தேர்ந்தெடுத்து அதில் “Claim Form” என்பதைத் தேர்ந்தெடுத்து, வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிடவும்.
  • அடுத்து “Proceed for Online Claim” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் “Form 31” என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின் நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை பதிவிட்டு வங்கி கணக்கு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றம் செய்யவும்.
  • கடைசியாக “Get Aadhaar OTP” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட வேண்டும்.
  • அதன் பின் உங்களது விண்ணப்பம் சரிபார்ப்பு குப் பிறகு பிஎஃப் தொகை உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here