சூப்பரான “கருப்பட்டி கோதுமை ஹல்வா” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

கோதுமை உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும், இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. ஹல்வா என்றாலே சர்க்கரை, இரசாயன கலர் போன்றவை சேர்த்து இருப்பார்கள் என்று பயப்பட வேண்டாம். இயற்க்கை பொருட்களையே வைத்தே ஹெல்தியான கோதுமை ஹல்வா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 

  • கோதுமை – 1/2
  • கருப்பட்டி – 1/2
  • முந்திரி – 100 கி
  • பாதம் – 100 கி
  • ஏலக்காய் – 2
  • நெய் – 250 மிலி
  • உப்பு – சிறிதளவு

செய்முறை:

கோதுமையை நன்றாக கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். மாவாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்து வெள்ளை துணியில் ஊற்றி நன்றாக பிழிந்து பால் எடுத்துகொள்ள வேண்டும். மற்றும், ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி பாலை காய்ச்சி வடிகட்டி வைக்கவும். கடினமான கடாயில் நெய் ஊற்றி கோதுமையை அரைத்து பிழிந்து எடுத்து வைத்த பாலை ஊற்றி, கட்டி எதுவும் விழாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இடை இடையே நெய் ஊற்றி ஹல்வா பதம் வரும்வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீரில் கையை நனைத்து மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஹல்வா பதம் வந்துவிட்டது என்று அர்த்தம். பதம் வந்தவுடன் கருப்பட்டி பாலை சேர்த்து கிளற வேண்டும். பொதுவாக, இனிப்பு வகைகள் செய்யும் போது சிறிதளவு உப்பு சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். உப்பு, ஏலக்காய் சேர்த்து இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதம் ஆகியவற்றை மேலே தூவி அனைவருக்கும் பரிமாறலாம். ஹெல்தியான கோதுமை ஹல்வா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here