சத்தான “கருப்பட்டி புட்டிங் கேக்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

கேக் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். புதுசு புதுசா, கலர் கலரா இருக்குற கேக் எல்லாம் பாத்தாலே சாப்பிடணும்னு ஆசையா இருக்கும். இன்னைக்கி பிறந்தநாள், கல்யாணம், பார்ட்டினு எத எடுத்தாலும் கேக் வெட்டமா இருக்க மாட்டாங்க. ஆனால், பேக்கரில கிடைக்குற கேக் எல்லாம் சாப்பிட்டா கண்டிப்பா உடல் எடை அதிகரிக்கும். அதற்கு பதிலா நாம எந்த ஒரு இரசாயன பொருளையும் பயன்படுத்தாம ஹெல்த்தியா எப்படி ஒரு புட்டிங் கேக் செய்யலாம்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சை அரிசி – 1/2 கிலோ
  • கருப்பட்டி – 1/2 கிலோ
  • ஏலக்காய் – 4
  • தேங்காய் – 1
  • உப்பு – சிறிதளவு
  • முந்திரி – 50 கி

செய்முறை:

பச்சரிசியை பொண்ணிறமாக வறுத்து ஆறிய பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை போட்டு வேகவிடவும். கருப்பட்டி தண்ணீரில் கரைந்து வந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து வடிகட்ட வேண்டும். ஏனெற்றால், சில சமயங்களில் கருப்பட்டியில் கல் அல்லது எறும்பு போன்றவை இருக்கும். வடிகட்டிய கரைசலில் அரைத்த பச்சரிசி மாவு, ஏலக்காய், சிறிதளவு உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கட்டி விழாமல் நன்கு கிளற வேண்டும்.

பிறகு கிளறிய மாவை தேவையான வடிவத்தில் பிடித்து கொண்டு தேங்காய் துருவலில் பிரட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். ஆவி வந்தவுடன் இறக்கிவிட்டு மேலே நெய்யில் வறுத்த முத்திரையை வைத்து அழகாக பரிமாறலாம். இதில் வெல்ல சர்க்கரை, மைதா போன்ற எதுவும் பயன்படுத்தவில்லை. அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here