பாத வெடிப்புகளை நீக்க ஈஸியான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
cracked heals
cracked heals

பாத வெடிப்பு பிரச்சனை ஆண்கள் பெண்கள் என அனைவர்க்கும் உள்ளது தான். பாதங்களில் நம் ஆரோக்கியம் அடங்கியுள்ளது. இந்த பிரச்சனையால் எரிச்சல், புண் ஏற்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இந்த பாத வெடிப்பை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம்.

பாத வெடிப்பு

உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன. இதனால் அதனை சுத்தம் செய்து தூண்டும்போது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

cracked heals
cracked heals

இதனால் மன அழுத்தம் குறைகிறது. பாத வெடிப்புகள் உள்ளதால் நடப்பதே சிரமமாகிறது. கல் போன்ற சிறு பொருட்களும் உள்நுழைந்து விடுகிறது. இதனால் புண்கள் ஏற்படுகின்றன.

பாத வெடிப்புகளை போக்க சில வழிமுறைகள்

முதலில் காலை scrub கொண்டு தேய்த்து கொள்ளவும். அதன்பின் எலும்பிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதனை காலில் தேய்த்துக்கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து அதன் பின் சாதா உப்பு, ஷாம்பூ சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் காலை வைத்து 15 நிமிடம் அப்படியே விட்டு விடவும். இதனால் காலில் உள்ள அழுக்குகள் இறந்த செல்கள் அகற்றபடும்.

cracked heals
cracked heals

பிறகு காலை துடைத்து விட்டு ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து அதன்பின் அதனை கால் முழுவதும் தடவவும் நன்கு மசாஜ் செய்வது போல தடவவும். பின்பு அதனை ஒரு துணியால் துடைத்து பிளாஸ்டிக் கவரை காலில் கட்டி அதன் மேல் காலுறை அணிந்து தூங்க வேண்டும். காலை எழுந்ததும் அவற்றை கழட்டி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். மேலும் மருதாணி இலை மற்றும் மஞ்சள்கிழங்கு இந்த இரண்டையும் அரைத்து காலில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 1 வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலும் பாத வெடிப்பு நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here