முன்பதிவு செய்தாலும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம்? IRCTC வழங்கிய வாய்ப்பு – எப்படி செய்வது தெரியுமா? 

0
முன்பதிவு செய்தாலும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம்

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைத்த இடத்தை அடைவதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அப்படி ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள் சில சூழ்நிலைகளால் முன்பதிவு செய்த இடத்தில் இருந்து ஏற முடியாமல் போவதுண்டு. அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் பயணிகளுக்காக IRCTC ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதாவது முன்பதிவு செய்த இடத்தில் இருந்து ஏற முடியாமல் போனால், பயணம் தொடங்குவதற்கு 4 மணி நேரம் முன்னதாக வரை நீங்கள் உங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதனை எப்படி மாற்றுவது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

  • முதலில் உங்களுடைய IRCTC கணக்கிற்கு சென்று முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு என்ற ஆப்சனுக்குள் செல்ல வேண்டும்.
  • இதனை தொடர்ந்து நீங்கள் மாற்ற செய்ய விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘போர்டிங் பாயிண்டை மாற்று’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • இதையடுத்து ஒரு திரை தெரியும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலை IRCTC காண்பிக்கும். அதன் பின்னர் மாற்றம் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • அடுத்ததாக மாற்றத்தைச் செயல்படுத்த ‘சரி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தும் செய்து முடித்த பின்னர் உங்கள் விருப்படி போர்டிங் பாயின்ட் மாற்றப்பட்டிருந்தால், வலதுபுறத்தில் வெற்றிகரமான எச்சரிக்கை தோன்றும்.
  • இது தொடர்பான செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த போர்டிங் பாயின்ட்டிற்கு சென்று பயணத்தை தொடரலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக PM கிசான் திட்டத்தில் 15வது தவணையை தாண்டிய முக்கிய அறிவிப்பு…, இத முதல்ல கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here