விவசாயிகளே.., PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? மத்திய அரசு சொன்ன தகவல்!!!

0
நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கி வருகின்றனர். தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வங்கி கணக்கில் மொத்தம் 16 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த PM கிசான் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
  • இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க pmkisan.gov.in என்ற பக்கத்தில் நுழைந்து ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்பதைக் கிளிக் செய்து ‘புதிய விவசாயி பதிவு’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட்டு, ‘பதிவு செய்ய தொடரவும்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து ஆதார் சரிபார்ப்பு மற்றும் நிலம் தொடர்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் உங்கள் பதிவு முழுமையாகிவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றும். பின் ஆவண சரிபார்ப்பு முடிந்தவுடன் அடுத்த தவணையில் இருந்து பணம் வரவு வைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here