வாட்ஸ்அப்பில் அறிமுகமான சேனல் வசதி…, எப்படி பயன்படுத்துவது?? முழு வழி முறைகள் இதோ!!

0
வாட்ஸ்அப்பில் அறிமுகமான சேனல் வசதி..., எப்படி பயன்படுத்துவது?? முழு வழி முறைகள் இதோ!!
வாட்ஸ்அப்பில் அறிமுகமான சேனல் வசதி..., எப்படி பயன்படுத்துவது?? முழு வழி முறைகள் இதோ!!

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப சமூக வலைதளங்கள் பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றனர். இந்த வகையில், வாட்ஸ்அப் செயலில் தற்போது புதிய சேனல்களை உருவாக்குவது போன்ற அப்டேட்டை வழங்கியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப்பில் தனித்துவமான மெசேஜிங் அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதனை எப்படி CREATE மற்றும் DELETE செய்வது குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

வாட்ஸ்அப் சேனல் create செய்வது:

  • முதலில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
  • அப்டேட் செய்த பின் வாட்ஸ்ஆப்பில் காட்டும் அப்டேட் பகுதிக்குள் நுழைந்து பிளஸ் (+) ஐகானை தொட வேண்டும்.
  • அதனுள் காட்டப்படும் “Create Channel”-லை கிளிக் செய்து Continue கொடுக்கவும். தொடர்ந்து, “Create Channel” லை கிளிக் செய்யவும்.
  • இதன் பின் channel உருவாகியவுடன் channel link- ஐ பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது?? தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி!!

வாட்ஸ்அப் சேனல் delete செய்தல்:

  • உங்களது வாட்ஸ்ஆப் channel பக்கத்தின் info- ஐ கிளிக் செய்து Delete Channel – ஐ தேர்வு செய்யவும்.
  • Delete செயல்பாட்டை உறுதி செய்யும் பக்கம் திறக்கும். அதில் கீழே காணப்படும் சிவப்பு நிற Delete பட்டனை கிளிக் செய்யவும்.
  • இதன் பின் வாட்ஸ்அப் சேனல் பதிவு செய்யப்பட்டுள்ள நம்பரை உறுதி படுத்த சொல்லி கேட்கும்.
  • இதனை தொடர்ந்து, மீண்டும் Delete பட்டனை கிளிக் செய்தால் சேனல் முழுமையாக அழிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here