தேவைப்பட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தலாம் – உள்துறை செயலாளர் எச்சரிக்கை!!!

0
கொரோனா இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை, தேவைப்படால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தலை கீழாக புரட்டி போட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும் இன்னும் இதன் பாதிப்பில் இருந்து முழுமையாக இந்தியாவால் வெளியே வரமுடியவில்லை. இருப்பினும் ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்த கொரோனா தொற்று ஜூலை மாதத்தில் குறைய தொடங்கியது.
இவ்வாறு படி படியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் பல்வேறு மாநில அரசுகளும் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதைத்தொடர்ந்து சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் டெல்டா பிளஸ் வைரசால் மூன்றாம் அலை பற்றிய பீதி வேறு மக்களிடம் எழுந்துள்ளது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை முழுமையாக ஓயவில்லை என்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்றும் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here