தடுப்பூசி தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள் – இரண்டாம் தவணை செலுத்த முடியாமல் மக்கள் ஏமாற்றம்!!

0

கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மக்கள் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியா கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினார். பின்பு ஏப்ரல் துவக்கத்தில் இருந்து தடுப்பூசி தான் உயிரை காக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இப்போது மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசிக்கு பற்றாக்குறையாக உள்ளது.

 

ஏற்கனவே இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவியது. பின்னர் மத்திய அரசு எடுத்த தீவிர முயற்சிகளால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஜூன் மாத கடைசியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின், தமிழ் நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளார். அதே போல கர்நாடகாவில் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்வதற்கான மருந்துகள் சரிவர வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தடுப்பூசி இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே வரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here