தனது 5 வது கணவரையும் விவாகரத்து செய்த பிக்பாஸ் பிரபலம் – வனிதாவையே பீட் பண்ணிட்டீங்களே!!

0

ஹாலிவுட் உலகில் பிரபல நாயகியாக வலம் வரும், நாயகி பமீலா ஆண்டர்சன் தனது ஐந்தாவது கணவரையும் விவாகரத்து செய்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாவது முறை விவாகரத்து:

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த இந்தி பிக்பாஸில் பங்கேற்றார். கடந்த 1995 இல் டோமி லீ என்ற இசைக் கலைஞரை காதலித்து திருமணம் செய்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவரை விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 2006 இல் கிட் ராக் என்ற  பாடகரை திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்தார். பின் அடுத்த ஆண்டில், ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்து, அவரையும் அதே 2007 ல் விவாகரத்து செய்தார்.

இதனை அடுத்து, 2014 இல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து, ஒரு வருடத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அவரை விவாகரத்து செய்தார். தற்போது 2020இல், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து செய்தார்.  தற்போது ஐந்தாவது முறையாக, தன்னுடைய பாதுகாவலர் ஹேஹர்ஸ்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அவரையும் விவாகரத்து செய்துள்ளார். இவர் நம்ம வனிதாவுக்கு டஃப் கொடுப்பார் போலையே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here