இந்து முறைப்படி மசூதியில் திருமணம் – மதத்தை மிஞ்சிய மனிதம்

0
Hindu Marriage on a Mosque

கேரளாவில் நேற்று (ஜனவரி 19) அன்று ஆலப்புழாவில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு மசூதியில் இந்து முறைப்படி இரு மதத்தினரும் புடைசூழ சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

விதவைப் பெண்

பிந்து என்ற கணவனை இழந்த பெண் இரண்டு பெண் குழந்தைகள் உடன் வாழ்ந்து வந்தார். அஞ்சு, அமிர்தாஞ்சலி என்ற இரு பெண்களும் போதிய வசதி இல்லாததால் 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டனர். இருவரையும் பிந்து கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் 26 வயதான அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை தேதி சம்மந்தம் செய்தார். ஆனால், போதிய வசதி இல்லாததால் எவ்வாறு திருமணம் நடத்துவது என்று கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். பிந்துவின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் நஜுமுதீன் என்பவரிடம் இதை கூறினார்.

பள்ளிவாசல் கமிட்டி உதவி

நஜுமுதீன் பள்ளிவாசல் கமிட்டியினரிடம் உதவி கேட்குமாறு கூறினார். இதனால் பள்ளிவாசல் கமிட்டிக்கு கடிதம் மூலம் உதவி கேட்டார் பிந்து. இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிவாசல் கமிட்டியினர் ஜோடிகளுக்கு பள்ளிவாசளிலேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் 10 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணமும் வழங்கி உதவினர்.

மெய்சிலிர்க்க வைத்த திருமணம்

பள்ளிவாசலில் திருமணம் நடந்தாலும் முழுக்க முழுக்க இந்து முறைப்படியே நடைபெற்றது. பட்டுப்புடவை பெண்களும், பர்தா அணிந்திருந்த பெண்களும் சூழ்ந்திருக்க அய்யர் மந்திரத்தோடு கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் 1000 பேருக்கு சுவையான சைவ உணவு பரிமாறப்பட்டது. கல்யாணத்தில் இரு மதத்தினரும் துளியும் வேறுபாடு இல்லாமல் ஒன்றாக அமர்ந்து பேசியது, சாப்பிட்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதனை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here