குரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதா??

0
TNPSC

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தேகத்திற்குரிய முடிவுகள்

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை மாநிலம் முழுவதும் நடத்தியது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதற்கான முடிவுகளும் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் 40 இடத்தைப் பிடித்தவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கீழக்கரை தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் முதல் அவ்வூரில் தேர்வெழுதி முதல் 40 இடத்திற்குள் வந்தவர்கள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இது குறித்து விசாரிக்குமாறு தேர்வர்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர். இடைத்தரகர் தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது.

சிறுபிள்ளைத் தனமான பதில்கள்

இதனால் முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்றது. இதில் ஏன் உங்கள் மாவட்டத்தை விட்டு அங்கு சென்று தேர்வு எழுதினீர்கள் என்ற கேள்விக்கு அனைவரும் “ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க சென்றதாகவும் அப்படியே தங்கி இருந்து தேர்வு எழுதியதாகவும்” ஒரே மாதிரியான பதிலினைத் தெரிவித்தனர். இதனால் மேலும் சந்தேகம் அதிகமானது.

தற்போது தேர்வு முடிவுகள் அனைத்தும் திருத்தப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here