ரோஹித், கோஹ்லி விளாசல் – இந்தியா அபார வெற்றி

0
India Vs Australia Series

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

பேட்டிங் சொதப்பல்

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை ஸ்மித் (131), லாபஸ்சேன் (54) ஆகியோரைத் தவிர வேறுயாரும் சிறப்பாக விளையாடவில்லை. மொத்தம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்ந்திருந்தது. பவுலிங்கில் முஹம்மது சமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரோஹித் ஷர்மா விஸ்வரூபம்

ரோஹித் ஷர்மாவின் ராசியான பெங்களூரு மைதானத்தில் நேற்றும் ரோஹித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த கோஹ்லி, ரோஹித் ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தது. ரோஹித் சர்மா 119 (128) ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷ்ரேயஸ் அய்யர் களமிறங்கி சிறப்பாக ஆடினார். மறுமுனையில் கோஹ்லி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இறுதியில் ஷ்ரேயஸ் அய்யர் 44 ரன்களுடனும் மனிஷ் பாண்டே 8 ரன்களுடனும் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.

இறுதியில் இந்தியா அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

தோனியை முந்திய கோஹ்லி

கேப்டன் ஆக குறைந்த போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த வீரர்களில் தோனியின் சாதனையை விராட் கோஹ்லி நேற்று முறியடித்தார்.

  1. விராட் கோஹ்லி – 82 போட்டிகள்
  2. மகேந்திர சிங்க் தோனி – 127 போட்டிகள்
  3. ரிக்கி பாண்டிங் – 131 போட்டிகள்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here