மாநில முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் என தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் அவர் சந்தித்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

கொரோனா பாதிப்பு:

இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 17,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 71 லட்சத்தை தாண்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சமீபத்திய நாட்களில் நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், வரும் பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Jai-Ram-Thakur-PM-Modi
Jai-Ram-Thakur-PM-Modi

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். கொரோனா உடன் தொடர்புடைய இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

இதனால் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக செய்த மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று உறுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக.,வில் இணைந்தார் நடிகை குஷ்பூ – பிரதமர் மோடி குறித்து பெருமிதம்!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, ஹரியானா முதல்வர் எம்.எல். கட்டார், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமாகி உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரணாப் அவர்கள் மூளை அறுவை சிகிச்சைக்கு பின்னர் கோமா நிலையில் ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here