
உலக முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. போச்சா புயல் கடந்து சென்ற பகுதிகளில் காற்று கூட வீசாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டு காலம் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2015ல் இருந்து புவி வெப்பத்தின் அளவு இயல்பு நிலையை விட அதிகமாக தான் இருந்து வருகிறது. அதே போல் இனி அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஆண்டில் புவி வெப்பத்தின் அளவு உச்சத்தை தொடும். அதற்கு காரணம் மனிதர்களால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்கள் மட்டுமின்றி, எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றமும் முக்கிய காரணி தான்.
நீட் தேர்வர்களே., தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!! இனி பயப்பட தேவையில்ல??
இதனால் 5 ஆண்டுகளில் குறைந்தது ஒரு வருடம் அதிகபட்சமாக வெப்பம் பதிவாகலாம் அல்லது 1 டிகிரி செல்ஷியஸ் முதல் 1.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.