#HBD MK Stalin : சினிமா முதல் சிம்மாசனம் வரை! முதல்வரின் 70 ஆண்டு பயணம் இதோ!!

0
#HBD MK Stalin : சினிமா முதல் சிம்மாசனம் வரை! முதல்வரின் 70 ஆண்டு பயணம் இதோ!!
#HBD MK Stalin : சினிமா முதல் சிம்மாசனம் வரை! முதல்வரின் 70 ஆண்டு பயணம் இதோ!!

இன்று 70 வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு, திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்து:

தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் தனது தந்தை கலைஞர் கருணாநிதி போலவே, மேடை நாடகங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். இவர் நடித்த முதல் நாடகமான “முரசே முழங்கு” மக்கள் மத்தியில் ரீச் ஆகியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து 1988ல் வெளியான ஒரே ரத்தம் என்ற படத்தில், சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடி மக்களுக்காக உயிர் துறந்த ஒரு தலைவனாக நடித்திருந்தார். தொடர்ந்து மக்கள் ஆணையிட்டால், குறிஞ்சி மலர் போன்ற படங்களில் நடித்தார். 1960களில், அரசியல் பயணத்தை தொடங்கி, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் 75வது வட்ட திமுக பிரதிநிதியாக முதல் பதவியை ஏற்றார்.

இதன் பிறகு 1976 இல், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார். பின்பு திமுக இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 1984 இல் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், 1996ல் சென்னை மேயர், 2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார். பின்பு கடந்த 2021ல் பத்தாண்டு போராட்டங்களுக்குப் பின் முதல்வர் அதிகாரத்தை பிடித்தார். இப்பொழுது வரை மக்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேறியுள்ளார்.

சிலிண்டர் விலை ரூ. 223 வரை திடீர் உயர்வு., புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

திமுகவின் 51 வருட கனவு நிறைவேறியதா???

தற்போது 70 வது அகவை காணும் முதல்வருக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் போன்ற பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு தமிழக ஆளுநர் ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், . #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here