சிலிண்டர் விலை ரூ. 223 வரை திடீர் உயர்வு., புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
சிலிண்டர் விலை ரூ. 223 வரை திடீர் உயர்வு., புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
சிலிண்டர் விலை ரூ. 223 வரை திடீர் உயர்வு., புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது இல்லத்தரசிகள் மற்றும் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளியான செய்தி:

கடந்த பிப்ரவரி மாதம், சமையல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதையடுத்து, பண்டிகை மற்றும் விழாக்கள் நெருங்கி வரும் இந்த மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று, பொதுமக்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி, சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டு, ரூ.1068 ஆக இருந்த ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,118.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன இசைஞானி….,வைரலாகும் வீடியோ!!!

இதனைத் தொடர்ந்து, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் ரூபாய் 223 வரை அதிகரிக்கப்பட்டு ஒரு சிலிண்டர் விலை ரூ.2268 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here