வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது.., போலீசார் அதிரடி!!!

0
வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது.., போலீசார் அதிரடி!!!
வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது.., போலீசார் அதிரடி!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் கொடுத்த வழக்கில் ஹரிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி டாக்டர் பட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பட்டங்களும் பொய்யானது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இது குறித்து போலீசில் வழக்கு பதிவும் செய்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வழக்கை விசாரித்த போலீசார் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் நிர்வாகி ஹரிஷ் தான் இதற்கெல்லாம் காரணம் என கண்டுபிடித்தனர். இந்நிலையில் இந்த அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் இந்த வழக்கு சம்பந்தமாக புகார் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து முன்ஜாமீன் கோரியிருந்தார்.

WPL 2023.., முதல் ஆட்டத்திலே எதிரணியை கலங்கடித்த மும்பை இந்தியன்ஸ்.., 207 ரன்கள் குவித்து அசத்தல்!!!

ஆனால் அவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து முன் ஜாமீன் கொடுக்க மறுத்தனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிஷை போலீசார் ஆம்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த இடைத்தரகர் கருப்பையாவையும் கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here