
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் அணியை வீழ்த்தி 207 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்திலே அதிரடி காட்டி குஜராத் வீராங்கனைகளின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்களும், மிலா கெர் 24 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். பின் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனைகளின் பந்து சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திருப்பினர். இதனால் குஜராத் அணி 15.1 ஓவர் முடிவிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்களுடன் தோல்வியை தழுவினர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் WPL தொடரின் முதல் வெற்றியை சொந்தமாக்கி கொண்டனர்.