
ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தனது இடது கணுக்காலில் காயம் அடைந்தார். இவரது காயத்தை மருத்துவ குழு ஸ்கேன் மற்றும் பரிசோதனை செய்து கண்காணித்து வந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவரது காயம் இன்னும் சரியகாத நிலையில், உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் பிரசித் கிருஷ்ணாவை உலக கோப்பை அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எது?? வெளியான புள்ளி பட்டியல் இதோ!!