“ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இவர் தான் சரியானவர்” மும்பை இந்தியன்ஸுக்கு ஐடியா கொடுக்கும் ஹர்பஜன் சிங்!!

0
"ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இவர் தான் சரியானவர்" மும்பை இந்தியன்ஸுக்கு ஐடியா கொடுக்கும் ஹர்பஜன் சிங்!!

மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு இந்த வீரர் தான் சரியாக இருப்பார் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்க இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் கடைசி இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டு ரசிகர்களையும் ஏமாற்றியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் விளைவாக எதிர்வரும் சீசனுக்காக பலம் வாய்ந்த அணியை உருவாக்க, மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு போட்டி போட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மேலும் பல வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்து தற்போது பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. சமீபத்தில் கீரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் இருந்து விலகியதை அடுத்து, இவரது இடத்தை டிம் டேவிட் நிரப்புவார் என கூறப்பட்டது.

தங்கமேனி கொஞ்சம் மினுமினுக்க..,அப்டி ஒரு அழகு ரதியா காட்சியளிக்கும் நயன்தாரா.., வைரலாகும் புகைப்படம்!!

இதுகுறித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், டிம் டேவிட், பொல்லார்ட் இடத்தை நிரப்பினால், ஹர்திக் பாண்டியா இடத்தை ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை சரியாக பயன்படுத்துவார் என கூறியுள்ளார். அதற்கான திறமை கேமரூன் கிரீனுக்கு அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த எதிர்வரும் சீசன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல சீசனாக அமையும் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here