Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

0
Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

Airtel:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான பல சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது, குறைவான விலையில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் 5G சேவையை கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அருமையான இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ரூ. 519 மற்றும் ரூ. 779 ஆகிய இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த இரண்டு புதிய திட்டத்தின் மூலமாக என்னென்ன நம்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். முதலில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ. 519 ரீசார்ஜ் திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியாகும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் இலவச Apollo 24|7 Circle, இலவச Hellotunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ. 779 ரீசார்ஜ் திட்டத்தில் 90 நாட்கள் செல்லுபடியாகும்படியான வசதியுடன் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும், ரூ. 519 ரீசார்ஜ் திட்டத்தை போலவே இலவச Apollo 24|7 Circle, இலவச Hellotunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here