ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேத எண்ணெய் – தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

0
hairfall

இந்த காலத்தில் உள்ள பெண்களுக்கு உள்ள அதிக பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு தான். கண்ட பொருட்களை தலைக்கு உபயோகிப்பதால் முடியை சரிவர பாதுகாத்ததாலும் இந்த முடி உதிர்வு பிரச்சனை தீர்க்க ஆயுர்வேத முறையில் வெற்றிலையை வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம் வாங்க.

முடி உதிர்வை தடுக்க

hair growth tips

நாம் தலை முடிகளுக்கு கெமிக்கல் நிறைந்த பல ஷாம்பூக்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடிகள் வலுவிழந்து விரைவாக உதிர்ந்தும் போகிறது. மேலும் தலை முடிகளில் பொடுகு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை அனைத்தையும் தடுக்க நாம் இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்பொழுது ஆயுர்வேத முறைப்படி முடி உதிர்வை தடுக்கும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

hair oil ingredients
hair oil ingredients

வெற்றிலை

செம்பருத்தி இலை

தேங்காய் எண்ணெய்

கற்றாழை

கறிவேப்பிலை

தயாரிக்கும் முறை

முதலில் வெற்றிலையை காம்பு நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதன் பின் செம்பருத்தி இலையை அதே போல சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு கருவேப்பிலையையும் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். மேலும் கற்றாழையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அது கொதித்ததும் கருவேப்பிலை, செம்பருத்தி இலை மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும். அதன் பின் கற்றாழையை சேர்க்கவும். இவை அனைத்தும் நன்கு கொதித்து வந்ததும் அதனை இறக்கி மூடி போட்டு மூடி வைக்கவும். இப்பொழுது 2 மணி நேரம் கழித்து அதனை எடுத்து வடிகட்டி ஆறியதும் தலைக்கு தேய்த்து வந்தால் முடியின் வேர் வலுவடையும். மேலும் இதனை இரவில் தடவி விட்டு காலையில் எழுந்து தலைக்கு குளித்தாலும் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here