தமிழகத்தில் தலைத்தூக்கி உள்ள H1N1 காய்ச்சல்., சுகாதாரத்துறை முக்கிய தகவல்!!

0

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக அதிகமான கொசுக்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

H1N1 காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் கொரோனாவால் முடங்கி இருந்தனர். மேலும் சுகாதார துறையின் கடுமையான நடவடிக்கையின் அடிப்படையில் நோய் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுமக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தும் வகையில், மாநிலம் முழுவதும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதாவது தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில் இந்த காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாக, தொண்டை வலி,100.4 டிகிரி வெப்பநிலை, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி , உடல் சோர்வு, வறட்டு இருமல், ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90 க்கும் கீழ் குறைதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஆகியவை என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிகுறி இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here