தமிழக அரசுக்கு எதிராக வழக்கு., ரூ.2.71 லட்சம் வழங்க உத்தரவு! மனுதாரருக்கு அடித்த ஜாக்பாட்!!

0
தமிழக அரசுக்கு எதிராக வழக்கு., ரூ.2.71 லட்சம் வழங்க உத்தரவு! மனுதாரருக்கு அடித்த ஜாக்பாட்!!
தமிழக அரசுக்கு எதிராக வழக்கு., ரூ.2.71 லட்சம் வழங்க உத்தரவு! மனுதாரருக்கு அடித்த ஜாக்பாட்!!

இயற்கை பேரிடர்களால் உருவான சேதங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இயற்கை பேரிடர்

சுனாமி, புயல், நிலநடுக்கம் என உலக மக்கள் பல்வேறு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோதாதன்று கொரோனா வைரஸ் மூன்று வருடங்கள் இந்திய மக்களை மிகவும் பாதித்து வந்தது. இன்னும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு தமிழக அரசு வழங்கியது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி இருவருக்கும் தலா ரூ.12000, ரூ.17000 என மிகக் குறைவான இழப்பீடு தொகையை வழங்கியதால், உரிய இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

IND vs BAN 2nd Test: 227 ரன்களுக்குள் சுருண்ட பங்களாதேஷ்…, பந்து வீச்சில் அசத்திய இந்தியா!!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர் சேதங்களுக்கு அரசு தான் உரிய இழப்பீடு தொகையை தட்டிக் கழிக்காமல் வழங்க வேண்டும். மேலும் 2019ம் ஆண்டு அரசாணை படி இருவருக்கும் தலா ரூ.1.50 லட்சம் என ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீடு போக மீதமுள்ள பணத்தை 8 வாரத்திற்குள் மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here