அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., இந்த தேதியில் தான்? அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

0
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., இந்த தேதியில் தான்? அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!
7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு துறை வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கேரளா அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இது அம்மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here