விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஓட்டு போட மாட்டேன்., அரவிந்த் சாமி பகீர் பேட்டி.,  காரணம் இதுதானாம்!!

0
விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஓட்டு போட மாட்டேன்., அரவிந்த் சாமி பகீர் பேட்டி.,  காரணம் இதுதானாம்!!
தமிழ்  சினிமாவில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் உள்ளத்தில் தளபதியாக குடியேறியவர் தான் விஜய். எக்கச்சக்க திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர், பல வருடங்களாக  ரசிகர்கள் மன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வந்தார். ஆனால் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போதைக்கு கமிட்டாகியிருக்கும் படங்களை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு முழுமையாக தான் விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
இவர் அரசியலுக்கு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சினிமாவை விட்டு இவர் விலகுவது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமியிடம் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஓட்டு போடுவீர்களா என  கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கு ரஜினி, கமல், விஜய் என அனைவரையும் பிடிக்கும். ஆனால்  அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன். மேலும் அவர்கள் சொல்லும் விஷயத்தில் ஏதாவது மாற்றம் நடக்கிறதா? அவர்களால் மக்களுக்காக செய்ய முடியுமா? மேலும் அவர்களின்  நோக்கம் எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நான் ஓட்டு போடுவேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here