அரசின் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கு குட் நியூஸ் – அரசு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

0
அரசின் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கு குட் நியூஸ் - அரசு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!
அரசின் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கு குட் நியூஸ் - அரசு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

இந்த ஆண்டு மகளிர்களுக்கான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மாநில கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலவச பயிற்சி:

பொதுவாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு பட்டபடிப்பை முடித்திருந்தால் போதுமானது. மேலும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வில் பாஸ் செய்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் அரசாங்கம் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் இலவச பயிற்சி மையங்களை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடத்தின் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மாநில கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த இலவச பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

செம குஷியில் சிவகார்த்திகேயன்.,என்ன கரணம் தெரியுமா? போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

பயிற்சி வகுப்புகள் மதுரையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரி, சென்னை ராணி மேரி கல்லூரி ஆகியவற்றில் 6 மாதத்திற்கு நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்த நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ந்நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நேரம் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் ராணி மேரி கல்லூரி மற்றும் மீனாட்சி கல்லூரியில் அடுத்த மாதம் டிசம்பர் (01.12.2022) தேதி அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here