‘காலையில் சரிவு, மாலையில் உயர்வு’ – பொதுமக்களை குழப்பும் தங்கத்தின் விலை!!

0

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் விளைவாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது.

இன்றைய நிலவரம்:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்தது. இதனால் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஏற்றுமதி இறக்குமதி குறையத் தொடங்கியது. ரியல் எஸ்டேட், பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் எதிர்கால பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களில் முதலீடு செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விளைவு ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சுக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சிறிது சிறிதாக குறையத் தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்ட தளர்வுகளே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று காலை விலை குறைந்திருந்த தங்கம், மாலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் 4 ரூபாய் அதிகரித்து ரூ.4,724க்கும், ஒரு சவரன் ரூ.32 உயர்ந்து ரூ.37,792க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.67.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here