Thursday, April 25, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

Must Read

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் அரசு பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்:

டிஎன்பிஎஸ்சி என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகின்றது. குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தகுதி மற்றும் பதவி வாரியாக தேர்வுகள் வித்தியாசப்படும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக அனைத்து தரப்பில் இருந்தும் கூறப்பட்டது. இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முறைகேடுகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதன் காரணமாக தேர்வுகளில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதில், குரூப் 4 தேர்வுகளில் முதன்மை மற்றும் இரண்டாம் கட்டம் என்று இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும் என்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அமைச்சர் விளக்கம்:

இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்தது. இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தவர்கள் மிகுந்த அச்சத்திலும், குழப்பத்திலும் இருந்து வந்தனர். இதன் காரணமாக தங்களை தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ளாமலும் இருந்து வந்தனர். இந்த குழப்பமான விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, “டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுகளில் இனி எந்த மாற்றமும் இல்லை. அதாவது தேர்வுகள் எப்போதும் போல் ஒரு தேர்வுடன் தான் நடைபெறும். தேர்வுக்கு தயாராகுபவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இது குறித்து கவலை பட தேவையில்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X