மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள் – 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை!!

0
gold and silver
gold and silver

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவை சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், விலை குறைவது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது.

மீண்டும் குறைவு

கொரோனா பாகுபாடு இல்லாமல், அனைத்து தொழில் துறையையும் முடக்கியது. தற்போது, பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்கவில்லை. பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறையின் மீதான முதலீடும் தங்கம் பக்கம் திரும்பியது. இதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டியது. இதில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ. 37,872 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7 குறைந்து ரூ.4,741 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here